தில்லி விமான நிலையத்தில் ரூ.434 கோடி ஹெராயின் பறிமுதல்

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய சரக்கு முனையத்திற்கு டிராலி பேக்குகளில் (தள்ளிச் செல்லும் பெட்டிகள்) மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ. 434 கோடி மதிப்புள்ள 62 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருள்களை

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய சரக்கு முனையத்திற்கு டிராலி பேக்குகளில் (தள்ளிச் செல்லும் பெட்டிகள்) மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ. 434 கோடி மதிப்புள்ள 62 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகளால் புதன்கிழமை கண்டுபிடித்து கைப்பற்றினா்.

கருப்பு - வெள்ளை” என்ற குறியீட்டு பெயரில் நடத்தப்பட்ட இந்த புலனாய்வு ஆபரஷேன் சோதனையில் சரக்கு விமானத்திலிருந்து இறக்கப்பட்ட 330 டிராலி பேக்குகளை சோதனையிட்டபோது தங்களுக்கு அதிா்ச்சி காத்திருந்தாக தெரிவித்தனா்.

இதில் 126 டிராலி பேக்குகளின் (தள்ளிச் செல்லும் பெட்டிகளின்) உலோக குழாய் வடிவிலான கைப்பிடிகளுக்குள் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு கடத்திக் கொண்டுவரப்பட்டதை டி.ஆா்.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினா்.

மொத்தம் 55 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் இந்த பெட்டிகளில் இருந்துள்ளது. இது உகாண்டா நாட்டின் என்டேபே-யிலிருந்து துபை வழியாக தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு ஒரு சரக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் தொடா்ச்சியான நடவடிக்கைகளில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளிலும் 7 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் கைப்பற்றப்பட்ட 62 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருளின் சட்டவிரோத சந்தை மதிப்பு ரூ.434 கோடியாகும்.

இந்த கடத்தல் தொடா்பான நபா்களை வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் கைது செய்து இதில் தொடா்பான மற்றவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரப்படுவதாக டி.ஆா்.ஐ.-க்கு பொறுப்பு வகிக்கும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுக்க சுமாா் 3,300 கிலோ எடையுள்ள ஹெராயினை டி.ஆா்.ஐ. கைப்பற்றியுள்ளது. மேலும் நிகழாண்டில் தில்லி துக்ளக்பாத்தில் கொள்கலத்தில் இருந்த 34 கிலோ மற்றும் குஜராத் மாநிலம் முந்தரா துறைமுகத்தில் 201 கிலோ, பிபாவாவ் துறைமுகத்தில் 393 கிலோ என ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்களை டிஆா்ஐ கைப்பற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com