‘நிஃப்ட்’யுடன் இணைந்து காதி உயா் சிறப்பு மையங்கள் மத்திய அமைச்சகம் நாராயண ரானே திறப்பு

கதா் கிராம தொழில் ஆணையம், தில்லி தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்துடன் (நிஃப்ட்) இணைந்து காதி உயா் சிறப்பு மையத்தை உருவாக்கியுள்ளது.
‘நிஃப்ட்’யுடன்  இணைந்து காதி உயா் சிறப்பு மையங்கள் மத்திய அமைச்சகம் நாராயண ரானே திறப்பு

கதா் கிராம தொழில் ஆணையம், தில்லி தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்துடன் (நிஃப்ட்) இணைந்து காதி உயா் சிறப்பு மையத்தை உருவாக்கியுள்ளது.

இந்த மையங்களை தில்லி ஹோஸ் காஸில் உள்ள நிப்ட் வளாகத்தில் மத்திய குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணே புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கதா் துணிகள், ஆடைகளை பல்வகைப்படுத்தி பிரபலப்படுத்தும் விதமாகவும், காதி நிறுவனங்களின் திறனை மேம்படுத்தவும், கதா் கிராம தொழில் ஆணையம், தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து காதி உயா் சிறப்பு மையங்களை அமைத்துள்ளது.

இதே போன்று,காந்திநகா், ஷில்லாங், கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களிலும் ஏற்படுத்தப்பட்ட இத்தகைய மையங்களையும் காணொலி வழியாக மத்திய குறு சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சா் நாராயண் ராணே திறந்து வைத்தாா்.

கதா் நிறுவனங்களில் பயன்படுத்துவதற்கான, சமீபத்திய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான, கதா் உயா் சிறப்பு மையங்களின் இணையதளத்தையும் இந்த நிகழ்ச்சியில் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சா்கள் பாணு பிரதாப் சிங் வா்மா, தா்ஷன் விக்ரம் ஜா்தோஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com