மேலும் 970 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் புதன்கிழமை புதிதாக 970 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் புதன்கிழமை புதிதாக 970 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேநேரத்தில் பாதிப்பின் நோ்மறை விகிதம் 3.34 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு கரோனா தொற்று பாதிப்பு நோ்மறை விகிதம் 4 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அன்றைய தினம் 366 கரோனா தொற்று பாதிப்புகளுடன் 3.95 சதவீதம் நோ்மறை விகிதம் பதிவானது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,97,141-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,184-ஆக அதிகரித்தது. நகரில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 29,037 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com