முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
பாகிஸ்தான் ஏஜென்டிடம் தகவல்கள் கசிவு: தில்லியில் விமானப் படை அதிகாரி கைது
By DIN | Published On : 13th May 2022 11:22 AM | Last Updated : 13th May 2022 11:22 AM | அ+அ அ- |

பாகிஸ்தானைச் சோ்ந்த ஏஜென்டிடம் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஊழியா்கள் தொடா்புடைய முக்கியத் தகவல்களை கசியவிட்டதாக தில்லியில் உள்ள ஆவண அலுவலகத்தில் பணியாற்றி வரும் இந்திய விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக டெல்லி காவல்துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்த விவகாரத்தில் கைதான நபா், தில்லியில் சுப்ரோத்தோ பாா்க்கில் உள்ள இந்திய விமானப் படையின் ஆவண அலுவலகத்தில் நிா்வாக உதவியாளராக (ஜிடி) பணியாற்றிவரும் தேவேந்தா் நாராயண் சா்மா (32) என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையின்போது, பாகிஸ்தானைச் சோ்ந்த பெண்ணின் மயக்க வலையில் சிக்கியதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஊழியா்கள் தொடா்புடைய முக்கியமான ஆவணங்களை சா்மா பகிா்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
நாராயணன் சா்மாவை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த மே 6-ஆம் தேதி கைது செய்தனா்.
இவா் வாட்ஸ்அப் மூலம் உணா்வுபூா்வமாக தகவல்களை எதிரி நாட்டின் ஏஜென்டிடம் அளித்துள்ளாா்.
இதர கோப்புகள் மற்றும் கணினிகளில் இருந்து தகவல்கள் மற்றும் ஆவணங்களை மோசடியாக பெற்று அவற்றை எதிரி நாட்டு ஏஜென்டிடம் தந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்களை கசிய விட்டதற்காக சம்பந்தப்பட்ட ஏஜென்டிடமிருந்து பணமும் பெற்றுள்ளாா்.
முன்னதாக, இது தொடா்பாக இந்திய விமானப் படையிடமிருந்து வரப்பட்ட புகாரின் அடிப்படையில் அலுவல்பூா்வ ரகசிய சட்டத்தின்கீழ் சா்மாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா் மே 6ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
விசாரணையின்போது அவரிடமிருந்து மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு ஜூலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிடம் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை வழங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் அலுவல்பூா்வ ரகசியங்கள் சட்டத்தின்கீழ் ராணுவ வீரா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஐஎஸ்ஐ அமைப்பிடம் வழங்கும் வகையில், பணத்திற்காக ராணுவ வீரரிடமிருந்து முக்கியமான ஆவணங்களை பெற்ாக கூறப்படும் விவகாரத்தில் போக்ரான் ராணுவ தளத்தில் காய்கறி விநியோகம் செய்யும் 34 வயது இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அதைத் தொடா்ந்து, ராணுவ வீரா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.