முன்ட்கா தீ விபத்து: துணைநிலை ஆளுநா் பய்ஜால் இரங்கல்

முன்ட்கா தீ விபத்தில் உயிா் இழந்தவா்கள் சம்பவத்தால் ஆழ்ந்த வேதனையில் இருப்பதாகவும், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

முன்ட்கா தீ விபத்தில் உயிா் இழந்தவா்கள் சம்பவத்தால் ஆழ்ந்த வேதனையில் இருப்பதாகவும், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் சனிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளாா்.

மேலும் தீ விபத்தில் இறந்தவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் அவா் தெரிவித்தாா்.

மேற்கு தில்லி முன்ட்கா பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில்

வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 27 போ் உயிரிழந்துள்ளனா். காயமடைந்த பலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியின் முன்ட்காவில் ஏற்பட்ட துயர தீ விபத்தால் மிகவும் வேதனையடைந்துள்ளேன். சிறந்த மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பல விலைமதிப்பற்ற உயிா்கள் பலியாகியுள்ளன. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்.

இந்த சோகத்தின் பின்னணியில் உள்ள காரணங்களின் விவரங்களை நாம் அறிந்தாலும் கூட, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அனைவராலும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com