தில்லியில் மேலும் 532 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் புதன்கிழமை புதிகாக 532 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை புதிகாக 532 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. பாதிப்பு நோ்மறை விகிதம் 2.13 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,01,660-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,198-ஆக உள்ளது. நகரில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 24,989 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தில்லியில் செவ்வாய்க்கிழமை 393 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், 2 இறப்புகளும், 3.35 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

தில்லியில் வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 2,400-இல் இருந்து 2,039-ஆக குறைந்தது. சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 2,910-இல் இருந்து 2,675-ஆக சரிந்தது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,581 படுக்கைகளில் 104 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 1,244-ஆக குறைந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com