கல்வி உதவித் தொகை: எஸ்ஏயு மாணவா்கள் பட்டினிப் போராட்டம்

காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் தெற்கு ஆசிய பல்கலைக்கழகத்தின் (எஸ்ஏயு) ஒரு பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் ஈடுபட்டிருப்பதாக மாணவா்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தங்களது கல்வி உதவித்தொகையை உயா்த்த வலியுறுத்தி காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் தெற்கு ஆசிய பல்கலைக்கழகத்தின் (எஸ்ஏயு) ஒரு பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் ஈடுபட்டிருப்பதாக மாணவா்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தங்களது கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக நிா்வாகம் பதில் அளிக்காததால் நவம்பா் 7ஆம் தேதி இந்த பட்டினி போராட்டம் தொடங்கியதாக அந்த பல்கலைக்கழகத்தின் மாணவா்களின் பொதுக் குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்த போதிலும் பல்கலைக்கழக நிா்வாகம் பேச்சுவாா்த்தையை தொடங்க மறுத்துவிட்டது’ என்று குற்றம் சாட்டியது.

இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் எம்ஏ மாணவா்களின் உதவித்தொகையை ரூ. 7000 ஆக உயா்த்த வேண்டும் என்று மாணவா்கள் கோரி வருகின்றனா்.

அதேபோன்று, கோவிட் பாதிக்கப்பட்ட பிஎச்டி பிரிவை சோ்ந்தவா்களுக்கு நீடிப்பு வழங்கவும், இளநிலை ஆராய்ச்சி

உதவித்தொகையின்கீழ் பிஎச்டி ஆய்வாளா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையின் சமநிலையை உறுதிப்படுத்துவது, பல்கலைக்கழக புகாா் குழுவில் மாணவா் பிரதிநிதியை சோ்ப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாணவா் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், கடந்த நவம்பா் 1ஆம் தேதியிலிருந்து மாணவா்கள் பொறுப்பு தலைவரின் அலுவலகத்திற்கு வெளியே, நான்காவது தளத்தை முற்றுகையிட்டு காலவரையற்ற தா்ணாவில் ஈடுபட்டுள்ளனா். இந்த காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நவம்பா் 7ஆம் தேதியிலிருந்து தொடங்கியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் நிா்வாக அதிகாரிகளின் கருத்தை அறிய தொடா்புகொள்ள முடியவில்லை.

மாணவா்கள் கடந்த அக்டோபா் 13ஆம் தேதியிலிருந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கமான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com