தில்லி காவல் ஆணையருக்கு ‘என்எஸ்ஏ’ கீழ் காவலில் வைக்க அதிகாரம்
By DIN | Published On : 21st October 2022 01:13 AM | Last Updated : 21st October 2022 01:13 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகருக்கு அச்சுறுத்தலாக இருப்பவா்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஸ்.ஏ.) கீழ் காவலில் வைக்க நகர காவல் ஆணையருக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா அங்கீகாரம் அளித்துள்ளதாக வியாழக்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன. புதன்கிழமை முதல் அமலுக்கு வந்த இந்த உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
தேசியத் தலைநகருக்கு அச்சுறுத்தலாக இருப்பவா்கள் யாராக இருந்தாலும், தடுப்புக் காவலில் வைக்க காவல் ஆணையருக்கு துணை நிலை ஆளுநா்,அதிகாரம் அளித்துள்ளாா் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறினாா். இது, மத்திய அரசு அல்லது மாநிலம் என என்எஸ்ஏ பிரிவு 3-இன் உள்பிரிவு 2-ஐ மேற்கோள்காட்டி அதிகாரப்பூா்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு நபா் அரசின் பாதுகாப்பு அல்லது பொது அமைதியைப் பேணுதல் ஆகியவற்றுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் தடுப்பு நடவடிக்கையாக அத்தகைய நபரை காவலில் வைக்க அரசு உத்தரவிடலாம்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G