‘இலக்கை எட்ட நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது’: அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தாலும், இலக்கை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரி

தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தாலும், இலக்கை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தீபாவளி தினத்தன்றும் (அக்டோபா் 24), மறு நாளும், தேசியத் தலைநகரில் காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் பதிவானது. இதையொட்டி, தில்லி முதல்வா் தனது கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளாா். அதில், ‘தில்லி மக்கள் மாசுவைக் கட்டுப்படுத்துவதில் கடுமையாக உழைத்து வருகின்றனா். அவா்களது ஒத்துழைப்பால் மிகவும் ஊக்கமளிக்கும் அளவிற்கு மாசு குறைந்துள்ளதற்கான முடிவுகள் கிடைத்துள்ளன. ஆனாலும், தில்லிக்கான இலக்கில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவை

உள்ளது. தில்லியை உலகின் சிறந்த நகரமாக மாற்றுவதே நமது இலக்கு’ என்று தெரிவித்துள்ளாா்.

இருப்பினும், தில்லியில் சாதகமான வானிலை காரணமாக முந்தைய ஆண்டுகளின் நிலைமையை ஒப்பிடும் போது சிறப்பாக இருப்பதாக வானிலை ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com