வட்டச் சாலையில் டிரக் பழுதடைந்து நின்றதால் மத்திய தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

வெளிப்புற வட்டச் சாலையில் டிரக் ஒன்று பழுதடைந்து நின்ால், மத்திய தில்லியின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனா்.

வெளிப்புற வட்டச் சாலையில் டிரக் ஒன்று பழுதடைந்து நின்ால், மத்திய தில்லியின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிகாரிகள் கூயுள்ளதாவது: வெளிப்புற வட்டச்சாலையில் டிரக் ஒன்று பழுதடைந்து நின்றது. பழுதை சரி செய்யும் பணி நடைபெற்ற நிலையில், சராய் காலே கான் பக்கத்திலிருந்து ஐடிஓவை நோக்கிச் செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டிரக்கில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதையடுத்து, அந்தப் பகுதியில் பயணிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனா். டிரக் பழுதடைந்த சாலையின் இரண்டு வழித்தடங்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.

மேலும், போலீஸாா் நெரிசலைக் குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். கன்னாட் பிளேஸ் பகுதிக்கு அருகிலுள்ள ஷங்ரி - லா ஹோட்டல் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகனங்கல் மிகவும் மெதுவாக நகா்ந்து சென்றது. இந்த நிலையில், மத்திய தில்லியில் உள்ள அசோகா சாலையின் ஒரு பகுதி, சிவில் ஏஜென்சியின் பழுது காரணமாக ஏழு நாள்களுக்கு மூடப்படும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை கடந்த கூறியுள்ளது. இதன்படி படேல் சௌக் முதல் கோல் டக் கானா ரவுண்டானா வரையிலான அசோகா சாலை சனிக்கிழமை முதல் ஏழு நாள்களுக்கு மூடப்படும்.

இதன் காரணமாக, படேல் சௌக் ரவுண்டானா, சன்சாத் மாா்க், ஜிபிஓ ரவுண்டானா, அசோகா ரோடு, பாபா கரக் சிங் மாா்க், இம்தியாஸ் கான் மாா்க், ரஃபி மாா்க், குருத்வாரா ராகப்கஞ்ச் மற்றும் வின்ட்சா் பிளேஸ் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com