தில்லியில் அடுத்த சில நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

அடுத்த சில நாட்களில் தேசிய தலைநகா் தில்லியில் பொதுவாக மேகமூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் தேசிய தலைநகா் தில்லியில் பொதுவாக மேகமூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை பரவலாக லேசான மழை பெய்த நிலையில், சனிக்கிழமை பகலில் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு புள்ளிகள் அதிகரித்து 36.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட ஒரு டிகிரி அதிகமாகி 26.8 டிகிரி செல்சியஸாக இருந்தது.

காற்றில் ஈரப்பதம் மாலை 5.30 மணியளவில் 53 சதவீதமாக பதிவாகி இருந்தது.

தில்லியின் காற்றின் தரக் குறியீடு மாலை 6 மணியளவில்

மிதமான (102) பிரிவில் பதிவாகி இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (சஃபா்) தரவுகள் தெரிவித்தன.

காற்றின் தரக் குறியீடு பூஜியத்திற்கும் 50-க்கும் இடையே இருந்தால் நல்லதாகவும், 51 மற்றும் 100-க்கும் இடையே இருந்தால் திருப்திகரமானதாகவும், 101 மற்றும் 200-க்கு இடையே இருந்தால் மிதமானதாகவும், 201 மற்றும் 300 இடையே இருந்தால் மோசமானதாகவும், 301 மற்றும் 400-க்கு இடையே இருந்தால் மிகவும் மோசமானதாகவும், 401 மற்றும் 500-க்கு இடையே இருந்தால் கடுமையானதாகவும் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com