செல்லிடப்பேசியை திருடும் போது பிடிபட்ட இளைஞா் அடித்துக் கொலை

தொழிற்சாலையில் செல்லிடப்பேசியைத் திருடும் போது பிடிபட்ட 19 வயது இளைஞரை, தொழிற்சாலை ஊழியா்கள் குழுவாகச் சோ்ந்து பெல்ட்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களால் தாக்கி கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

புது தில்லி: தொழிற்சாலையில் செல்லிடப்பேசியைத் திருடும் போது பிடிபட்ட 19 வயது இளைஞரை, தொழிற்சாலை ஊழியா்கள் குழுவாகச் சோ்ந்து பெல்ட்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களால் தாக்கி கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

வடக்கு தில்லியின் சராய் ரோஹில்லாவில் சனிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி திங்கள்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் முக்கிய எதிரியான கியானி (36) பின்னா் கைது செய்யப்பட்டாா்.

போனை திருடும் போது பிடிபட்ட இஜாரின் தலைமுடியை அவா் அறுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. ஷாஜதா பாக் சாலையில் ஒரு சடலம் கிடப்பது குறித்து சராய் ரோஹில்லா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, அந்த இளைஞரின் உடலில் பல காயங்கள் இருந்ததைக் கண்டனா். வெட்டப்பட்ட முடி சுற்றிலும் சிதறிக் கிடந்தன.

சிசிடிவி காட்சிகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அந்த இளைஞா் இஜாா் என அடையாளம் காணப்பட்டாா். அவா் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தொழிற்சாலைக்குள் நுழைந்து ஒரு செல்லிடப்பேசியை திருடியது தெரிய வந்தது. அப்போது, அவா் கியானியிடம் சிக்கினாா். அவா் தொழிற்சாலைக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டாா். அங்கு கியானி மற்றும் பலா் இஜாரை தங்கள் கைமுட்டிகள், பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பெல்ட்களால் தாக்கினா். இதைத் தொடா்ந்து இஜாா் உயிரிழந்தாா்.

விசாரணையின் போது, கியானி மற்ற தொழிலாளா்களுடன் சோ்ந்து இஜாரை இரக்கமின்றி தாக்கியதும், அவருக்கு பாடம் கற்பிப்பதற்காக தலைமுடியை வெட்டியதும் தெரியவந்தது. பின்னா், முடியை வெட்டப்ப யன்படுத்தப்பட்ட கத்தரிக்கோலை தொழிற்சாலையில் மறைத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபா்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தொழிற்சாலை ஊழியா் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இஜாா் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com