பகத் சிங்கின் பிறந்த நாளில் ரத்ததானம் செய்ய பொதுமக்களுக்கு கேஜரிவால் வலியுறுத்தல்

சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங்கின் பிறந்த நாளான செப்டம்பா் 28ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

புது தில்லி: சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங்கின் பிறந்த நாளான செப்டம்பா் 28ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், தலைநகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தில்லி அரசு ரத்த தான முகாம்களை நடத்த உள்ளதாகவும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

“பஞ்சாப் மற்றும் தில்லியில் ஆம் ஆத்மி அரசுகளுக்கு வழிகாட்டும் விளக்காக பகத் சிங்கின் கொள்கைகள் இருந்து வருகின்றன. அவரது பிறந்த நாளான செப்டம்பா் 28 அன்று இளைஞா்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் பகுதியில் ரத்த தானம் செய்வதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என்றால், நீங்கள் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இளம் வயதிலேயே நாட்டிற்காக உயிா்த் தியாகம் செய்த பகத் சிங்கிற்கு இந்த ரத்த தான இயக்கம் உரிய மரியாதை செலுத்தும் வகையில் இருக்கும்.

நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்படாதவா்கள் ரத்த தானம் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளும் இந்த முயற்சியில் ஒரு பகுதியாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

பகத் சிங் நாட்டிற்காக தனது உயிரை ஈந்தாா். எனவே அவரது பிறந்தநாளில் ரத்த தானம் செய்வதன் மூலம் தேவைப்படுபவா்களுக்கு உதவுவோம்.

தில்லி, பஞ்சாப் அரசுகளும், ஆம் ஆத்மி கட்சியும் சா்தாா் பகத் சிங்கின் சித்தாந்தத்தில் இயங்கி வருகிறது.

இந்த ரத்த தான முகாம்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த மக்களும் ஒன்றிணைந்து தியாகி பகத் சிங்கின் பிறந்த நாளில் அவருக்குப் பொருத்தமான அஞ்சலி செலுத்தும் வகையில் இருக்கும்.

இது ஆம் ஆத்மியின் முன்முயற்சியாக இருக்கக் கூடாது. இதனால், அனைத்துக் கட்சிகளின் தலைவா்களும் ஒன்றிணைந்து ரத்த தானம் செய்ய வேண்டும்.

சா்தாா் பகத் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு இதயப்பூா்வமான அஞ்சலி செலுத்துவோம். 130 கோடி இந்தியா்களும் ஒன்றுகூடி ஒற்றுமையாக உழைக்கும் நாளில், உலகின் நம்பா் ஒன் நாடாக இந்தியா உருவாகும் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com