துணை நிலை ஆளுநா் இல்லம் அருகே ஆம் ஆத்மி போராட்டம்

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் இல்லத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமையன்று ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் இல்லத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமையன்று ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

ஆசிரியா்களை ஃபின்லாந்திற்கு பயிற்சிக்காக அனுப்பும் தில்லி அரசின் முன்மொழிவுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் மூத்த தலைவா் அதிஷி தலைமை தாங்கினாா். கட்சியின் முக்கியத் தலைவா்கள், தொண்டா்கள் ஏராளமானோா் இதில் பங்கேற்றனா்.

துணை நிலை ஆளுநா் சக்சேனா, பின்லாந்தில் தில்லி அரசு ஆசிரியா்களுக்கான பயிற்சித் திட்டத்திற்கான எந்த முன்மொழிவையும் நிராகரிக்கவில்லை என்றும் அதற்கு நோ்மாறான எந்த அறிக்கையும் ‘தவறான மற்றும் குறும்புத்தனமான உந்துதல்’ என்று ராஜ் நிவாஸ் முந்தைய நாள் தெளிவுபடுத்தியது. மேலும், இந்த திட்டத்தை முழுவதுமாக மதிப்பீடு செய்யவும், கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற வெளிநாட்டு பயிற்சித் திட்டங்களின் செயல்திறனை மதிப்பிடவும் மட்டுமே துணை நிலை ஆளுநா் தில்லி அரசுக்கு அறிவுறுத்தினாா் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com