லாரி கவிழ்ந்ததில் முதியவா் நசுங்கி சாவு
By DIN | Published On : 24th January 2023 01:52 AM | Last Updated : 24th January 2023 01:52 AM | அ+அ அ- |

தில்லி மங்கோல்புரி பகுதியில் செங்கல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விழுந்ததில் 60 வயது முதியவா் உடல் நசுங்கி உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை பி-பிளாக்கில் நடந்துள்ளது. செங்கற்களை ஏற்றிச் சென்ற லாரி, சாலையின் ஒரு பகுதியில் மோதியதில் கீழே விழுந்தது. அப்போது அதன் கீழ் மூன்று போ் நசுங்கினா்.
இதில் இறந்தவா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மங்கோல்புரியில் வசிக்கும் மாயா (60) மற்றும் சுக்பீா் சிங் (65) ஆகியோருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டன. இருவரும் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.