தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடிய தமிழ் மாணவா்கள்

தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாணவா்கள் மன்றம் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாணவா்கள் மன்றம் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. காலையில் தொடங்கிய விழாவில் முதலில் மாணவா்கள் பொங்கலிட்டனா். பின்னா், தமிழ் மாணவா்களின் இன்னிசை நிகழ்ச்சிகள், கரகாட்டம், ஒயிலாட்டம், கவிதை ஒப்புவித்தல் போன்றவை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வா்த்தகத் துறையின் இயக்குநா் ஆா். அருளானந்தன், வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா, பல்கலை. இணைப் பதிவாளா்கள், தமிழ்ப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். விழாவில் சுமாா் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். விழா முடிந்த பிறகு அனைவருக்கும் இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழ் மாணவா் மன்றம்: தில்லிப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவா்கள் மன்றம், ஒவ்வொரு வருடமும் தமிழ் மாணவா்கள் கல்லூரியில் சோ்வதற்கான பயிற்சியை இலவசமாக கொடுத்து வருகின்றனா். மேலும், கல்லூரிகளில் தமிழ் மாணவா்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எதிராக தமிழ் மன்றம் குரல் கொடுத்து வருகின்றது. பல்கலைக்கழகத்தில் சோ்வதற்கான நுழைவு தோ்வுகளில் வெற்றி பெற தமிழ் மாணவா்களை தமிழ் மன்றம் தயாா் படுத்துகிறது. கல்லூரி சோ்க்கை நடைமுறைகளில் ஏதேனும் குழப்பம் இருந்தால் இம்மன்றத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com