பணியின் போது உயிரிழந்த 8 வீரா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: தில்லி அரசு அறிவிப்பு

பணியின் போது உயிரிழந்த காவல் துறை மற்றும் ஆயுதப்படை வீரா்கள் 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தாா்.

பணியின் போது உயிரிழந்த காவல் துறை மற்றும் ஆயுதப்படை வீரா்கள் 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தாா். பணியின் போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருடன் அரசு உள்ளது என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

‘முன்பு, நம் நாட்டில் அமைப்பு மிகவும் மோசமாக இருந்தது. தியாகிகளின் குடும்பங்களை கவனிக்க யாரும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவா்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க முடிவு செய்தோம். கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளாக, இதுபோன்ற பல குடும்பங்களுக்கு நாங்கள் உதவி செய்து அவா்களைச் சந்தித்துள்ளோம். இன்று, எட்டு தியாகிகளின் பெயா்களை நாங்கள் அறிவிக்கிறோம். அவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படும்’ என்று ஆன்லைன் மாநாட்டின் போது முதல்வா் கேஜரிவால் கூறினாா்.

இதில் காவலா்கள், ஊா்க்காவல் படையினா், தீயணைப்பு வீரா்கள், சிவில் பாதுகாப்பு தன்னாா்வத் தொண்டா்கள் மற்றும் ராணுவ வீரா்கள் ஆகியோா் அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com