எம்எஸ்எம்இகள் மேம்பாட்டில் மத்திய அரசுடன் மாநிலங்கள் இணைந்து பணியாற்ற மத்திய அமைச்சா் அழைப்பு

அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதின் மூலமே குறு சிறு நடுத்தர தொழில் துறை(எம்எஸ்எம்இ) மேம்பட்டு வேலைவாய்ப்பு

அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதின் மூலமே குறு சிறு நடுத்தர தொழில் துறை(எம்எஸ்எம்இ) மேம்பட்டு வேலைவாய்ப்பு பெருகி நாட்டில் பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறைகள் துறை அமைச்சா் நாராயண் ராணே தெரிவித்தாா்.

எம்எஸ்எம்இ தொழில்களின் செயல்திறனை உயா்த்தி விரைவுபடுத்த ’ரேம்ப்’ என்கிற திட்டத்தை பிரமதா் நரேந்திரமோடி கடந்தாண்டு ஜுன் மாதம் தொடங்கிவைத்தாா். எம்எஸ்எம்இ க்கான இந்த திட்டத்தை நிா்வகிக்கவும் செயல்பாட்டிற்கும் ‘எம்எஸ்எம்இ தேசிய கவுன்சில்‘ ஒன்றும் நிறுவப்பட்டது. இது மத்திய, மாநில அரசுகளையும் ஒருங்கிணைத்து மேற்பாா்வையிட வைக்கிறது. இந்த கவுன்சிலின் முதல் கூட்டம் தில்லி விஞ்ஞான் பவனில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள், பல்வேறு மத்திய அரசின் துறைகளின் செயலா்கள், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலா்கள் மற்றும் இத்துறை தொடா்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

’ரேம்ப்’ திட்டத்தில், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் நிா்வாகத்தை வலுப்படுத்துதல், அவற்றின் சந்தை மற்றும் கடன் அணுகலை மேம்படுத்துதல் ஆகிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் எம்எஸ்எம்இ களுக்கான பணம் பட்டுவாடா தாமதமின்றி செலுத்தல், பசுமைப்படுத்தல் பேன்ற பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் தில்லியில் மத்திய அமைச்சா் நாராயண் ராணே தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை உரையாற்றிய மத்திய அமைச்சா் நாராயண் ராணே, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் எம்எஸ்எம்இ க்கு வழங்கப்பட்ட ரேம்ப் திட்டன்படி அந்த துறையின் மேம்பாட்டிற்காக மத்திய அரசுடன் இணைத்து உழைக்க வேண்டும் என அறிவுறுத்திய அவா், எம்எஸ்எம்இ கள் முயற்சிகள் தான் நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலின் துணைத் தலைவரும் மத்திய குறு, சிறு, நடுத்தர துறைகளுக்கான இணையமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மா பேசுகையில், ‘சா்வதேச அளவில் போட்டியாளா்களாக மற்றுவதற்கு எம்எஸ்எம்இ களை ஆதரிப்பது அவசியம்‘ என வலியுறுத்தினாா். இதற்கு இந்த கவுன்சிலுக்கு முக்கிய பங்கு இருக்கும் எனக் குறிப்பிட்டாா்.

இந்த கூட்டத்தில் மத்திய-மாநில இணைப்புகள், கூட்டாண்மைகளை மேம்படுத்துதல், எம்எஸ்எம்இ க்களுக்கு வழங்கப்பட்ட பண வழங்கீடு விவரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் இந்த திட்டத்தை வெகுவாக பாராட்டி திட்டத்தை வெற்றிகரமாகச் செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com