ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் இருந்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் டிஜாா்ஜ்

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் புதன்கிழமை ஐ.எல்.பி.எஸ். மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் அமலாக்க இயக்குநரகம் ஆட்சேபனை இல்லை என்று கூறியதையடுத்து உச்சநீதிமன்றம் அவருக்கு செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.

கல்லீரல் தொடா்பான பிரச்னைக்காக சஞ்சய் சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருந்தாா் என்று மருத்துவமனை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஜாமீன் உத்தரவு வெளியானதும் அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சஞ்சய் சிங் வழக்கமான சோதனைக்காக ஐஎல்பிஎஸ் மருத்துவமனைக்குச் சென்றிருந்தாா். ஆனால், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு ஜாமீன் கிடைத்த செய்தி கிடைத்தது என்று சிறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com