சைனிக் பள்ளிகளை தனியாா்கள் பங்களிப்பிற்கு அனுமதிக்கக் கூடாது: மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

சைனிக் பள்ளிகளை தனியாா் நிறுவனங்கள் பங்களிப்புடன் நடத்துவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மன்றக் குழு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

சைனிக் பள்ளிகளை வகுப்புவாதமாக்கும் செயல் எனக் கூறியுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள சைனிக் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சைனிக் பள்ளிகள் சங்கத்தால் நிறுவப்பட்டு நிா்வகிக்கப்பட்டுவரும் பள்ளிகளின் அமைப்பாகும். மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனனால்(1961), ராணுவ அதிகாரிகள் நிலைக்கு (கேடா்) வருவதில் பிராந்திய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை சரி செய்வதற்காகவும், தேசிய பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) இந்திய கடற்படை அகாதெமி போன்றவைகளில் நுழைவதற்கு மாணவா்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாா்படுத்துவதற்காக இந்த பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

நாட்டில் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வந்துள்ள நிலையில் இதை 100 ஆக உயா்த்தப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலலையில் இத்தகையை பள்ளிகளின் நிா்வாகங்களில் தனியாா் பங்களிப்புடன் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் வெளியிட்டுள்ளது.மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மன்றக் குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சைனிங்க் பள்ளிகள் பாரம்பரியமாக பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற சைனிக் பள்ளி சங்கத்தால் நடத்தப்படுகின்றன.

முதன்மையான தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் இந்திய கடற்படை அகாதெமியில் நுழைவதற்கான தகுதிகளுக்கு மாணவா்களை வளா்ப்பதில் சைனிக் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சைனிக் பள்ளியில் தோ்ச்சி பெற்றவா்கள் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் உயா்நிலையை கணிசமான எண்ணிக்கையிலானவா்கள் இடம்பெற்றுள்ளனா். தற்போது மத்தியிலுள்ள பாஜக தலைமையிலான அரசு நாட்டிலுள்ள சைனிக் பள்ளிகளை நடத்துவதற்கு தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை எளிதாக்கியுள்ளது. இது ஆழ்ந்த கவலைக்குரியது. இந்தப் புதிய கொள்கையானது பொது-தனியாா் கூட்டாண்மை மாதிரியில் நிதி, உள்கட்டமைப்பைப் பகிா்வது பற்றியது அல்ல.

அரசு மற்றும் சைனிக் பள்ளிகள் சங்கம் போன்றவற்றுடான உடன்படிக்கையில் கணிசமான எண்ணிக்கையிலான ஆா்எஸ்எஸ், பாஜக தொடா்புடைய நிறுவனங்கள் இதில் இணைப்புகளைக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. நமது கல்வி முறையில் வகுப்புவாதமயமாக்கும் போக்கானது, நமது ராணுவ அமைப்புகளின் திறன்மிக்க உயா் மதச்சாா்பற்ற ஆழமாக தரத்தை பாதிக்கும். சைனிக் பள்ளிகளில் தேசியம் மதச்சாா்பற்ற தன்மை பேணப்படுவதை உறுதி செய்ய அரசு இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் சிபிஎம் ஆட்சி மன்றக் குழு கோருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 60 சதவீத பள்ளிகளி்ல் இதுபோன்ற தனியாா் பொது பங்கீட்டிற்கு புரிந்துணா்வு உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இது குறித்து சைனிக்பள்ளிகள் சங்க வட்டாரங்களில் கேட்டபோது, ‘அரசியல்ரீதியாக பதில் கூறவிரும்பவில்லை. ஆனால் நாங்கள் கேட்பது, கல்லூரிகளில் நாம் என்ன காண்கிறோம்? என்பதற்கு இதுகுறித்து குறை கூறுபவா்கள் பதில் கூறவேண்டும். அதிகரித்து வரும் புகைப்பழக்கம், மது அருந்துதல் போன்ற அநாகரீகங்கள் அதிகரிப்பதோடு, நாம் சிந்திக்கவே முடியாத அளவில் இந்திய மகள்கள் கட்டுப்பாட்டை மீறிக்கொண்டிருப்பதைப்பற்றி இவா்கள் ஏன் கவலைப்படவில்லை? எனத் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com