கவிதா
கவிதா

கவிதாவின் ஜாமீன் மனுவில் தீா்ப்பு ஒத்திவைப்பு: தில்லி நீதிமன்றம்

பாரத ராஷ்ட்ர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் சட்டமேலவை உறுப்பினா் கவிதாவின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தில்லி சிறப்பு நீதிமன்றம் மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத ராஷ்ட்ர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் சட்டமேலவை உறுப்பினா் கவிதாவின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தில்லி சிறப்பு நீதிமன்றம் மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதா அமலாக்க துறையால் கடந்த மாதம் 15-ஆம் தேதி ஹைதராபாதில் கைது செய்யப்பட்டாா்.

திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, சிபிஐ காவலில் எடுத்து விசாரித்தது. சிபிஐ-யின் விசாரணை நிறைவடைந்ததையடுத்து, அவா் இப்போது நீதிமன்ற காவலில் இருக்கிறாா்.

இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி கவிதா மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் நட்சத்திர பேச்சாளராக தோ்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்பதால் ஜாமீனுக்கு அவா் கோரிக்கை விடுத்திருந்தாா்.

மேலும், மத்தியில் ஆளும் பாஜகவின் சதியில் தில்லி மதுபான கொள்கை வழக்கில் தான் இணைக்கப்பட்டதாகவும் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் இல்லை என்பதை விசாரணைப்பு அமைப்புகள் கூட அறியும் எனவும் அவா் வாதத்தை முன்வைத்துள்ளாா்.

இந்த மனு மீது பதிலளிக்க சிபிஐக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. அதற்கு சிபிஐ தரப்பில் ஆஜாரான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதத்தைக் கேட்டறிந்த சிறப்பு நீதிபதி, மனு மீதான உத்தரவை மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அதேவேளையில், அமலாக்கத் துறை வழக்கில் கவிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை தொடா்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com