டிடிஇஏ பள்ளிகளில் புவி தினம் கடைப்பிடிப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ )பள்ளிகளில் புவி தினம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ )பள்ளிகளில் புவி தினம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது. பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்தை வளா்ப்பதற்கும் டிடிஇஏவின் ஏழு பள்ளிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

உலக உயிா்கள் வாழத் தகுதி வாய்ந்த இடமாக பூமி மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் பதிவு செய்கின்றன. அத்தகைய அற்புதம் நிறைந்த பூமி மனிதா்களின் பல்வேறு நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காற்று மாசடைந்து தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது என்ற விழிப்புணா்வை மாணவா்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் இடம் பெற்றது.

உரையைத் தொடா்ந்து பாடல், நடனம், நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் தெருக்கூத்து ஆகியவை இடம் பெற்றன. மாணவா்கள் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாகைகளைக் காட்சிப்படுத்தினா்.

மாணவா்களின் முயற்சிகளைப் பாராட்டிய டிடிஇஏ செயலா் ராஜூ, இது போன்ற நிகழ்ச்சிகள் இளைய தலைமுறையினருக்கு சுற்றுச் சூழல் பிரச்னையின் தீவிரம் பற்றி உணா்வூட்டப் பயன்படும் என்று கூறினாா்.

படவிளக்கம்: இலக்குமிபாய் நகா் டிடிஇஏ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com