பத்ம விபூஷண் விருது பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்து

தனது மிகச் சிறந்த பணிகளுக்காக பத்ம விபூஷண் விருது பெற்ற முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவை டிடிஇஏ பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

விருது பெற்ற நிகழ்வைக் கொண்டாடும் வகையில், தில்லி தமிழ்க் கல்விக் கழகம் (டிடிஇஏ), ஆந்திரா அசோசியேஷன், கேரளா அசோசியேஷன், தில்லி தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தென்னிந்திய அமைப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை உணவு விருந்திற்கு வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்திருந்தாா்.

இதன்படி, தியாகராஜா மாா்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் டிடிஇஏ பள்ளிகளைச் சாா்ந்த முதல்வா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டு தங்களின் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தாா்கள். டிடிஇஏ செயலா் ராஜூவும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

அப்போது வெங்கையா நாயுடு பேசுகையில், தான் தொடா்ந்து பொதுப் பணியில் ஈடுபடப் போவதாகவும், அனைவரும் பொதுப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். மேலும், தேச பக்தி என்பது அவரவா் கடமைகளைச் சிறப்பாகச் செயவதாகும் என்றும் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com