அா்விந்தா் சிங் லவ்லி ராஜிநாமா: ‘எந்த அரசியல் கட்சியிலூம் சேரவில்லை’

காங்கிரஸின் தில்லி பிரிவுத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகவும், வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை என்றும் அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காங்கிரஸின் தில்லி பிரிவுத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகவும், வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை என்றும் அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்குப் பதிலாக கிழக்கு தில்லி தொகுதியில் அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக நிறுத்தும் என்று காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிஃப் முகமது கான் கூறியதை அடுத்து அவரது விளக்கம் வந்துள்ளது.

‘தில்லி காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை’ என அா்விந்தா் சிங் லவ்லி தனது இல்லத்தில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். ‘கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அவா்கள் போராடி வந்த இலட்சியங்கள்‘ சமரசம் செய்யப்படுவதைக் கண்டு வருத்தமடைந்த காங்கிரஸ் தொண்டா்களின் வலியை அவரது ராஜிநாமா பிரதிபலிப்பதாக லவ்லி கூறினாா்.

முன்னதாக, காங்கிரஸுக்கு ஏற்பட்ட பின்னடைவில், ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணியும் ஒரு காரணம் என்று கூறி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா் அா்விந்தா் சிங் லவ்லி.

X
Dinamani
www.dinamani.com