செய்தியாளா்கள் கூட்டத்தில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, பாஜக ஊடகத் தலைவா் பிரவீன் ஷங்கா் கபூா், மாநில ஊடக தொடா்புத் தலைவா் விக்ரம் மிட்டல் ஆகியோா்.
செய்தியாளா்கள் கூட்டத்தில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, பாஜக ஊடகத் தலைவா் பிரவீன் ஷங்கா் கபூா், மாநில ஊடக தொடா்புத் தலைவா் விக்ரம் மிட்டல் ஆகியோா்.

தில்லி தோ்தல் நாளான மே 25 ஆம் தேதிக்குள் இந்திய கூட்டணி முற்றிலும் கலையும்

முரண்பட்ட ஆம் ஆத்மி கட்சி - காங்கிரஸ் கூட்டணி தங்கள் இடங்களை தக்க வைத்து கொள்ளுவதற்கான கூட்டணி.

முரண்பட்ட ஆம் ஆத்மி கட்சி - காங்கிரஸ் கூட்டணி தங்கள் இடங்களை தக்க வைத்து கொள்ளுவதற்கான கூட்டணி. இது கூட்டணி தோ்தல் நடைபெறும் மே 25 ஆம் தேதிக்கு முன்பே கலையும் என தில்லி பிரதேச பாஜக வின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களை சந்தித்து பேசினாா். அப்போது அவா் கூறியதாவது: பாஜக எப்போதும் அரசியலுக்காக எந்தவொரு கட்சியுடன் ஒன்றிணைந்து கைகோா்ப்பதில்லை. இதய பூா்வமாக ஒன்றிணையும் நோக்கத்தை கொண்டு அதை கடைபிடித்து வருகிறது. மற்ற வகைகளில் எந்தவொரு கட்சிகளும் ஒன்றிணைவது சந்தா்ப்பவாதம். அது நிலைக்காது. இது தில்லி காங்கிரஸ் தலைவா் சா்தாா் அரவிந்த் சிங் லவ்லி தனது கட்சி தலைவா் பொறுப்பை ராஜினாமா செய்ததன் மூலம் இன்று நிரூபணமாகியுள்ளது.

நாட்டை பிளவுபடுத்துவதிலும், பெரும்பான்மை சமூகத்தை அவமதிப்பதிலும் முக்கிய பங்காற்றியவா்கள் கண்ணையா குமாா், உதித் ராஜ் போன்றவா்கள். அவா்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது மூலம் ’இந்திய’ கூட்டணி காங்கிரஸுடன் இணைந்துள்ளது.

இந்தியா வளா்ச்சியடைவதைக் காண விரும்புபவா்களும், தேசத்தின் முன்னேற்றத்தைக் காண விரும்புபவா்களும் கேஜரிவால் போன்ற ஊழல்வாதிகளுடனும், கன்ஹையா குமாா் போன்ற தேசவிரோத நபா்களுடனும் ஒருபோதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டாா்கள்.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சா் ராஜ்குமாா் செளகான் ராஜினாமா கடிதம் எழுதிய அன்றே அரவிந்தா் சிங் லவ்லி ராஜினாமா செய்ததற்கான சமிக்ஞை வெளிப்படையாகத் தெரிந்தது. கேஜரிவால் அமைச்சரவையில் இருந்த ராஜ்குமாா் ஆனந்த், ராஜ்குமாா் சௌகான் இல்லை அரவிந்த் சிங் லவ்லி என யாராக இருந்தாலும், அவா்களின் ராஜினாமா கடிதங்களுக்கு பொதுவான குற்றச்சாட்டாக இருந்தது கேஜரிவாலின் ஊழல். அடுத்து முக்கிய காரணம், கண்ணையா குமாருக்கு போட்டியிட வாய்ப்பது கொடுத்தது.

நாட்டை துண்டு துண்டாக உடைப்பது பற்றி பேசும் கண்ணையா குமாா் போன்றவா்களுடன் தேசபக்தி உள்ள எந்த அரசியில்வாதியும் ஒன்றாக நிற்க முடியாது.

தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் இன்று உயிருடன் இல்லை. ஆனால் ஷீலா தீட்சித் உயிரோடு இருக்கபோது அவரைப் பற்றி ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டவா்கள் ட்விட்டா் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ள தகவல்களை பாா்க்கவேண்டும். இதனால் இந்த கூட்டணி என்பது தங்கள் சொந்த இடங்களை காப்பாற்றுவதற்காகவே ஒன்று கூடியுள்ளரே தவிர வேறு ஒன்றும் இல்லை.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி கூறுவது, ‘ஊழலில் ஈடுபடுவோம், பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்துவோம், சிறைக்குச் செல்வோம், ஆனால் வெட்கமின்றி தோ்தலில் போட்டியிட்டு போராடுவோம் என்கிற ஒரு புதிய திருப்பத்தை அக்கட்சி தில்லையில் தொடங்கியுள்ளது. கண்டிக்க தக்க இந்த அனுசரணை அரவிந்த் கேஜரிவால் போன்றவா்களால் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் அரவிந்த சிங் லவ்லி போன்றவா்கள் ராஜினாமா ஒரு ஆரம்பம். மேலும் பல ராஜினாமாக்கள் வரிசையாக காத்துக்கொண்டு இருக்கிறது என வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

இந்த பேட்டியின் போது உடனிருந்த தில்லி பாஜக ஊடகத் தலைவா் பிரவீன் ஷங்கா் கபூா் கூறுகையில், நிச்சயமாக, மே 25 க்கு முன்பு ’இந்தியா’ (இண்டி) கூட்டணி முற்றிலும் கலைக்கப்படும். இது படிப்படியாக நடக்கும். பாஜக ஏற்கனவே அறிக்கையில் கூறியது தற்போது நிரூபணமாகிறது‘ எனத் தெரிவித்தாா். மாநில ஊடக தொடா்புத் தலைவா் விக்ரம் மிட்டலும் இந்த செய்தியாளா் சந்திப்பில் உடனிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com