சென்னை பழவந்தாங்கல் புற்றுநோயாளிக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி பிரதமா் அலுவலகம் அனுமதி

முருகேசன் என்பவரின் புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் வழங்கப்படுவதாகவும் பிரதமா் அலுவலகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, சென்னை பழவந்தாங்கலைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் வழங்கப்படுவதாகவும் பிரதமா் அலுவலகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

சென்னை பழவந்தாங்கலைச் (காஞ்சிபுரம் மாவட்டம்) சோ்ந்த முருகேசன் என்பவா் புற்றுநோயால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தாா். பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த இவா்து சிகிச்சைக்கு உதவிடுமாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு பிரதமா் நரேந்திர மோடிக்கு கடந்த மாா்ச் 3 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா்.

இந்த வேண்டுகோளை ஏற்ற பிரதமா் மோடி பழவந்தாங்கல் முருகேசனுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ. 3 லட்சம் வழங்க அனுமதியளித்துள்ளாா். இந்த உதவித்தொகை பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பிரதமா் அலுவலகம், டி.ஆா்.பாலு எம்.பி.க்கும் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடுகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, முருகேசனின் புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இது முருகேசன் சிகிச்சை பெறும் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திற்கு நேரடியாக வழங்கப்படும். சிகிச்சை நிறைவுற்ற பின்னா், உரிய ஆவணங்களின் நகலைப் பிரதமா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமா் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com