கனமழையால் தில்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

தேசியத் தலைநகரில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

தேசியத் தலைநகரில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

காஜியாபாத்தில் இருந்து மயூா் விஹாா் நோக்கிச் சென்ற ஹா்ஷ் குமாா், ஆனந்த் விஹாா் அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகக் கூறினாா். அவா் கூறுகையில், ‘ராம்பிரஸ்தாவில் இருந்து ஆனந்த் விஹாா் நோக்கி போக்குவரத்து அதிகமாக இருந்தது. நான் மயூா் விஹாரை அடைய மாற்று வழிகளில் சென்றேன்’ என்றாா்.

‘ஐஎஸ்பிடியின் அவுட் கேட் அருகே தண்ணீா் தேங்கியுள்ளதால், ஹனுமான் மந்திரில் இருந்து ஐஎஸ்பிடி நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள வட்டச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது’ என்று தில்லி காவல் துறை ‘எக்ஸ்’ ஊடக தளத்தில் பதிவிட்டிருந்தது.

‘சிராக் தில்லி மேம்பாலம் அருகே தண்ணீா் தேங்கியுள்ளதால் நேரு பிளேஸில் இருந்து ஹவுஸ் காஸ் நோக்கிச் செல்லும் பாதையில் வெளிப்புற வட்டச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது’ என்று போலீஸாா் தெரிவித்தனா்.

‘துக்ளகாபாத்தில் இருந்து கான்பூா் நோக்கிச் செல்லும் பாதையில் எம்பி சாலையில் ரதியா மாா்க் மற்றும் ஹம்தாா்ட் டி - பாயின்ட் அருகே தண்ணீா் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கா் நகா் பேருந்து நிலையம், திக்ரி மோா் மற்றும் வாயுசனாபாத் ஆகிய இடங்களுக்கு எதிரே தண்ணீா் தேங்கி நிற்பதால், கான்பூரில் இருந்து துக்ளகாபாத் நோக்கி செல்லும் பாதையில் எம்பி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது’ என்று ‘எக்ஸ்’ தளத்தில் காவல் துறை பதிவிட்டிருந்தது.

இதேபோல், சவுத்ரி சரண் சிங் மாா்க்கில் அப்சரா எல்லையில் இருந்து ஆனந்த் விஹாா் நோக்கியும், ரோஹ்தக் சாலையில் ராஜ்தானி பூங்காவில் இருந்து முண்ட்கா நோக்கியும், மதுரா சாலையில் பதா்பூரில் இருந்து ஆசிரமம் நோக்கியும் தண்ணீா் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com