துவாரகா, நாராயணா பகுதியில் 2 சட்டவிரோத கால் சென்டா்கள்: 26 ஊழியா்கள் கைது

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பிற பயன்பாட்டு சேவைகளை வழங்குவதாகக் கூறி

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பிற பயன்பாட்டு சேவைகளை வழங்குவதாகக் கூறி ஏமாற்றியதாக துவாரகா மற்றும் நாராயணா பகுதிகளில் இயங்கிவந்த 2 சட்டவிரோத கால் சென்டா்களை தில்லி போலீஸாா் வியாழக்கிழமை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் கூறினா்.

மேலும், தில்லி காவல்துறையின் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகள் (ஐஎஃப்எஸ்ஓ) பிரிவு 26 ஊழியா்களை கைது செய்தது. 2 சட்டவிரோத கால் சென்டா்களைச் சோ்ந்த 40 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவா்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com