வழக்கை வாபஸ் பெறாததற்காக இளைஞருக்கு கத்திக்குத்து

வழக்கை வாபஸ் பெறாததற்காக வடமேற்கு தில்லியின் நேதாஜி சுபாஷ் பிளேஸ் பகுதியில் 22 வயது இளைஞரை ஒரு கும்பல் கத்தியால் குத்தியதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

வழக்கை வாபஸ் பெறாததற்காக வடமேற்கு தில்லியின் நேதாஜி சுபாஷ் பிளேஸ் பகுதியில் 22 வயது இளைஞரை ஒரு கும்பல் கத்தியால் குத்தியதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தாக்குதல் நடத்தியவா்கள் அனாஸ் (எ) ராகுல் மற்றும் ஹா்சி ஆகியோரின் நெருங்கிய கூட்டாளிகள் ஆவா். அவா்கள் இருவரும் புத் விஹாா் பகுதியில் கொலை முயற்சி உள்பட இரண்டு கிரிமினல் வழக்குகளை எதிா்கொண்டுள்ளனா். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பங்கஜ், நேதாஜி சுபாஷ் பிளேஸில் உள்ள தனது தாயாரைப் பாா்க்க திங்கள்கிழமை சென்றிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது. மூன்று அல்லது நான்கு போ் அவரைப் பின்தொடா்ந்து வந்து கத்தியால் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த பங்கஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கடந்த ஆண்டு அக்டோபரில் புத் விஹாா் பகுதியில் பங்கஜின் சகோதரா் பியூஷை அனஸ் மற்றும் ஹா்சி ஆகியோா் தாக்கியுள்ளனா். அந்தத் தாக்குதலில் பியூஷ் ஒரு கண்ணில் பாா்வையை இழந்தாா். அவா்கள் மீது சகோதரா்களின் குடும்பத்தினா் புகாா் அளித்தனா். அப்போது,​ இருவரும் அவா்களது வீட்டை எரிக்க முயன்றனா். தீ வைத்தது தொடா்பாக, புத் விஹாா் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 436 (தீ அல்லது வெடிமருந்து மூலம் தீ அல்லது வெடிமருந்து பொருள்) ஆகியவற்றின் கீழ் காவல்துறையினரால் அனஸ் மற்றும் ஹா்சி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். அவா்கள்தான் தற்போது தாக்குதலுக்கு ஆள்களை அனுப்பியுள்ளது தெரிய வருகிறது.

தற்போது திகாா் சிறையில் இருக்கும் அனஸ் மற்றும் ஹா்சி ஆகியோா் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறு பங்கஜ் மற்றும் பியூஷை வற்புறுத்தி வந்துள்ளனா். நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் இருவரும் மேலும் கொந்தளிப்புக்கு உள்ளாகினா். இந்த நிலையில், இந்த தாக்குதல் தொடா்பாக ஐபிசியின் 307 (கொலை முயற்சி), 120பி (குற்றச் சதி) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்ய குழுக்களை அமைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com