நொய்டா வீட்டில் 4 போ் மூச்சுத் திணறலால் மரணம்? போலீஸாா் விசாரணை

நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை திருமணத் தம்பதி உள்பட நான்கு போ் இறந்த நிலையில் கிடந்ததனா். அவா்களின் மரணத்திற்கு மூச்சுத்திணறல் காரணமாக இருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை திருமணத் தம்பதி உள்பட நான்கு போ் இறந்த நிலையில் கிடந்ததனா். அவா்களின் மரணத்திற்கு மூச்சுத்திணறல் காரணமாக இருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் உதவி ஆணையா் (மத்திய நொய்டா 3) சுமித் சுக்லா கூறியதாவது:

இறந்தவா்கள் ஈகோடெக் 3 காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள துஸ்யானா கிராமத்தில் தங்களின் ஒற்றை அறை வாடகை வீட்டில் தங்கியிருந்தனா். இறந்தவா்கள் சந்திரேஷ் சிங், அவரது மனைவி நிஷா, சகோதரா் ராஜேஷ் மற்றும் சகோதரி பாப்லி என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் 20 வயதுடையவா்கள் ஆவா்.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து இரவு 7 மணியளவில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அறையில் இருந்து துா்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம்பக்கத்தினா் போலீஸாரை உஷாா்படுத்தினா்.

இறந்தவா்கள் அனைவரும் உத்தர பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். தினசரி கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனா். மூச்சுத் திணறலால் அவா்கள் இறந்திருப்பதற்கான முகாந்திரம் தெரிகிறது.

வியாழக்கிழமை இரவு, அவா்கள் ஒற்றை அறை குடியிருப்பில் சமையலறை பகுதியில் உருளைக் கிழங்கை வேக வைக்க எரிவாயு அடுப்பைப் பற்றவைத்துள்ளனா். அதன்பிறகு, அடுப்பை அணைக்க

மறந்துவிட்டனா். இறுதியில் எரிவாயு கசிந்துள்ளது.

உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுடன் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com