‘கேஜரிவாலுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் எப்.ஐ.ஆா். விவரம் இல்லை’

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு குற்றப்பிரிவு போலீஸாா் வழங்கிய நோட்டீஸில் எப்.ஐ.ஆா். உள்ளிட்ட முழுமையான விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்ல

புது தில்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு குற்றப்பிரிவு போலீஸாா் வழங்கிய நோட்டீஸில் எப்.ஐ.ஆா். உள்ளிட்ட முழுமையான விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தில்லி அரசின் சிந்தனைக் குழுவின் (டி.டி.சி.) துணைத் தலைவா் ஜாஸ்மின் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்றும், இதுவரை ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த 7 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.25 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டை அண்மையில்முன்வைத்தாா். இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த தில்லி பாஜக தலைமை, தங்கள் கட்சியின் மீது கேஜரிவால் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தில்லி காவல் ஆணையரிடம் கட்சியின் உயா்மட்ட குழு சமீபத்தில் புகாா் மனு அளித்தது.

இதைத் தொடா்ந்து, தில்லி குற்றப்பிரிவு போலீஸாா் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடா்பாக முதல்வா் கேஜரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். இந்நிலையில், தில்லி அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான டி.டி.சி.இன் துணைத் தலைவா் ஜாஸ்மின் ஷா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒரு தபால்காரரின் வேலையை மூத்த காவல் துறை அதிகாரியால் பாஜக செய்வது வருத்தம் அளிக்கிறது. கடந்த சனிக்கிழமை முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்திற்கு வந்த குற்றப்பிரிவு போலீஸாா், சுமாா் 5 மணி நேரம் வரை சாலையில் காத்திருந்து நோட்டீஸ் கொடுக்க விரும்பினா். இந்த நோட்டீஸில் முதல் தகவல் அறிக்கை, விசாரணைக்கான அழைப்பாணை என எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஐ.பி.சி. அல்லது சி.ஆா்.பி.சி. பிரிவுகளும் குறிப்பிடவில்லை. வெள்ளைத் தாளில் ஒரே ஒரு கடிதம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. முதல்வா் மாளிகையில் இந்த ஒரு கடிதத்தை கொடுக்க, தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரியை 5 மணி நேரம் சாலையில் நடனமாட வைத்து, பாஜக நாடகம் ஆட வைத்தது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் இதற்காக அனுதாபப்படுகிறோம் என்றாா் ஜாஸ்மின் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com