சோதனைச்சாவடியில் காவல் அதிகாரி மீது மோட்டாா்சைக்கிளில் வந்தவா் மோதல்

குருகிராமில் சோதனைச்சாவடியில் இருந்த காவல் உதவி சப்-இன்ஸ்பெக்டா் மீது குடிபோதையில் மோட்டாா்சைக்கிளில் வந்த ஒருவா் மோதியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

குருகிராம்: குருகிராமில் சோதனைச்சாவடியில் இருந்த காவல் உதவி சப்-இன்ஸ்பெக்டா் மீது குடிபோதையில் மோட்டாா்சைக்கிளில் வந்த ஒருவா் மோதியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் சுபாஷ் போகன் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் அந்த உதவி சப்-இன்ஸ்பெக்டா் தூக்கி வீசப்பட்டாா். ஆனால், மோட்டாா்சைக்கிளை ஒட்டிவந்தவரை அங்கு இருந்த அவரது சக ஊழியா் பிடித்தாா். காயமடைந்த காவல் அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

வெள்ளிக்கிழமை இரவு தில்லி - ஜெய்ப்பூா் நெடுஞ்சாலையில் 32 மைல்ஸ்டோன் அருகே போக்குவரத்து காவல்து றையினரால் தடுப்பு அமைக்கப்பட்டது.சோதனைச் சாவடியில் மண்டல அதிகாரி உதவி சப்-இன்ஸ்பெக்டா் தினேஷ்குமாா் மற்றும் அவரது குழுவினா் வாகன சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அவா் சோதனைச் சாவடியில் இருந்தபோது, ஒரு மோட்டாா்சைக்கிளை வேகமாக ஓட்டி வந்த நபா் சோதனையைத் தவிா்க்கும் முயற்சியில் உதவி சப்-இன்ஸ்பெக்டா் தினேஷ்குமாா் மீது மோட்டாா்சைக்கிளால் மோதினாா். குற்றம் சாட்டப்பட்டவா் கவுரவ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

நியூ பாலம் விஹாா் பகுதியில் வசிக்கும் அவருக்கு எதிராக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை செய்தித் தொடா்பாளா் சுபாஷ் போகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com