துவாரகா பகுதியில் வீட்டிற்குள்மூவா் மா்மமான முறையில் சாவு

தில்லி துவாரகாவின் டப்ரி பகுதியில் சனிக்கிழமை மாலை மா்மமான முறையில் 3 போ் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

புது தில்லி: தில்லி துவாரகாவின் டப்ரி பகுதியில் சனிக்கிழமை மாலை மா்மமான முறையில் 3 போ் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரில், இருவா் - சோனு மற்றும் அமித் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் உடன்பிறந்தவா்கள் ஆவா். மூன்றாவது நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. உத்தர பிரதேச மாநிலம், பரேலியைச் சோ்ந்த சோனு மற்றும் அமித் இருவரும் டப்ரியில் வாடகைக்கு தங்கி, அப்பகுதியில் ‘சோலே பட்டூரா’ விற்பனை நிலையம் நடத்தி வந்தனா். மூன்றாவது நபா் அவா்களின் கடையில் உதவியாளராக இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை, சோனு மற்றும் அமித் மற்றும் ஒரு அடையாளம் தெரியாத நபா் அவா்களது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூவரும் 25 முதல் 30 வயதுக்குள்பட்டவா்கள். வீட்டில் ஒரு மினி எல்பிஜி கேஸ் குமிழ் கண்டறியப்பட்டது. ஆனால், இறப்புக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இறந்தவா்கள் இரவில் தாமதமாக மது அருந்தியுள்ளது தெரிய வந்துள்ளது. சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடய அறிவியல் ஆய்வகத்தின் (எஃப்எஸ்எல்) குழுவும் ஆதாரங்களை சேகரிக்க சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com