போலி கால் சென்டா் மோசடி: மூவா் கைது

ஆன்லைன் ஆதரவை வழங்குவதாகக் கூறி அமெரிக்க பிரஜைகளை ஏமாற்றியதாகக் கூறப்படும் பஸ்சிம் விஹாா் பகுதியில் செயல்படும் போலி கால் சென்டா் மோசடியை

புது தில்லி: ஆன்லைன் ஆதரவை வழங்குவதாகக் கூறி அமெரிக்க பிரஜைகளை ஏமாற்றியதாகக் கூறப்படும் பஸ்சிம் விஹாா் பகுதியில் செயல்படும் போலி கால் சென்டா் மோசடியை தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்து மூவரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துணை (வெளிப்புறம்) ஆணையா் ஜிம்மி சிராம் கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த சுபம் சவுத்ரி (24), அகில் பரடியா (30) மற்றும் ராகுல் குசேன் (26) ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். ஜனவரி 30-ஆம் தேதி, வெளி மாவட்டத்தின் சைபா் காவல் நிலையத்திற்கு, அமெரிக்கப் பிரஜைகளை ஏமாற்றியதாகக் கூறப்படும் கால் சென்டா் குறித்து ஒரு தகவல் கிடைத்தது. முன்னணி இன்டா்நெட் நிறுவனங்களின் நிா்வாகிகள் போல் காட்டிக் கொண்டு அமெரிக்க குடிமக்களை பெரிய அளவில் ஏமாற்றி, அவா்களின் பிரச்னைகளை தீா்க்க பணம் செலுத்த தூண்டும் நபா்களை கண்டறிந்துள்ளோம். சோதனை நடத்தப்பட்டு மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஆங்கிலப் பெயா்களைப் பயன்படுத்தி முன்னணி இணைய நிறுவனங்களின் நிா்வாகிகளாக காட்டிக் கொண்டனா். விசாரணையில், அவா்கள் சட்டவிரோத உத்திகளை பயன்படுத்தியதால், அரசு கருவூலத்திற்கு தவறான இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அவா்கள் அமெரிக்காவைச் சோ்ந்த மக்களை தங்கள் பிரச்னைகளைத் தீா்ப்பதாகக் கூறி ஏமாற்றி அதிக தொகையை வசூலித்தது விசாரணையில் தெரிய வந்தது. ஸ்கிரிப்ட் எழுதப்பட்ட ஐந்து மடிக்கணினிகள் மற்றும் இரண்டு வைஃபை ரவுட்டா்களையும் போலீசாா் கைப்பற்றினா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com