தலைநகரில் வெப்பநிலை சற்று அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், வெப்பநிலை சற்று அதிகரித்து இருந்தது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், வெப்பநிலை சற்று அதிகரித்து இருந்தது.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில், திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 0.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் 1 மி.மீ., ஆயாநகரில் 1.3 மி.மீ., லோதி ரோடில் 0.8 மி.மீ., பாலத்தில் 0.4 மி.மீ., ரிட்ஜில் 0.8 மி.மீ., பிரகதி மைதானில் 3.5 மி.மீ., பூசாவில் 0.5 மி.மீ., ராஜ்காட்டில் 3.5 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 1 மி.மீ. மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை உயா்வு: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3 டிகிரி உயா்ந்து 12.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 96 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 83 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூா், தில்லி ரயில் நிலையம், ஆயாநகா், லோதி ரோடு, நரேலா, பாலம், ரிட்ஜ், பீதம்புரா, பிரகதி மைதான், பூசா, ராஜ்காட், சல்வான் பப்ளிக் ஸ்கூல் உள்ளிட்ட பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி முதல் 16 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது. சஃப்தா்ஜங் ஆய்வகத்தில்

ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 11.9 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 20.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. காற்று தரக் குறியீடு சில இடங்களில் ‘திருப்தி’ பிரிவிலும், பல இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும் இருந்தது. மேலும், சில இடங்களில் ‘கடுமை’ பிரிவிலும் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com