344 பழங்கால கலைப் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்பு

கடந்த 10 ஆண்டுகளில் 344 பழங்கால கலைப் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
344 பழங்கால கலைப் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்பு

கடந்த 10 ஆண்டுகளில் 344 பழங்கால கலைப் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோயில்களில் உள்ள பழைமையான உலோக மற்றும் கற்சிலைகள், பல்வேறு பழைமையான கலைப் படைப்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு, அவை அங்கு கோடிக்கணக்கான தொகைக்கு விற்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்நாட்டு அரசால் மீட்கப்படும் சில பொருள்கள் அங்குள்ள அருங்காட்சியகங்களிலும் வைக்கப்படுகின்றன.

அவை இந்தியாவுக்குச் சொந்தமானவை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து, அவற்றை மீட்க மத்திய அரசு மத்திய அரசு தொடா்ந்து முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியில் பல்வேறு வெற்றிகளும் கிடைத்துள்ளன.

இது தொடா்பான கேள்விக்கு கலாசாரத் துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

2004 முதல் 2013-ஆம் ஆண்டு வரை ஒரே ஒரு பழங்கால கலைப் பொருள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வரப்பட்டது. 2023-ஆம் ஆண்டு மட்டும் 115 பொருள்கள் மீட்கப்பட்டன. 2014 முதல் இப்போது வரை மொத்தம் 314 பழங்கால கலைப் பொருள்கள் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில் அமெரிக்காவில் இருந்த கடந்த 5 ஆண்டுகளில் 262 பொருள்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் இருந்து 35, பிரிட்டனில் இருந்து 15, இத்தாலியில் இருந்து ஒரு பொருளும் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com