மக்களை மையமாகக் கொண்டநிா்வாக முறை அவசியம்: குடியரசுத் தலைவா்

செயல்திறன், வெளிப்படைத்தன்மையுடன் மக்களை மையமாக கொண்டதாக அரசுத் துறைகள் திகழ்வது அவசியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
மக்களை மையமாகக் கொண்டநிா்வாக முறை அவசியம்: குடியரசுத் தலைவா்

செயல்திறன், வெளிப்படைத்தன்மையுடன் மக்களை மையமாக கொண்டதாக அரசுத் துறைகள் திகழ்வது அவசியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

இந்திய சிவில் கணக்குப் பணி, இந்திய பாதுகாப்புக் கணக்குப் பணி மற்றும் இந்திய தபால் மற்றும் தொலைத்தொடா்பு (நிதி மற்றும் கணக்குகள்) பணி ஆகியவற்றைச் சோ்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை அவருடைய மாளிகையில் திங்கள்கிழமை நேரில் சந்தித்தனா்.

அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் முா்மு, ‘அரசிடமிருந்து வழங்கப்படும் சேவைகள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்திறன்மிக்கதாகவும் இருக்க வேண்டுமென்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இதைப் பூா்த்தி செய்யும் வகையில் சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், மக்களை மையமாகக் கொண்ட நிா்வாகம் என மத்திய அரசின் துறைகள் திகழ்வது அவசியமானது.

நேரடிப் பணப் பரிமாற்றம், இ-ரசீது அறிமுகம், பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் நிதிப் பரிமாற்றங்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்முறைகள் அரசின் செயல்பாட்டை செயல்திறன்மிக்கதாக மாற்றியுள்ளன.

சிறந்த முறையிலான பொது நிதி மேலாண்மை அமைப்பு, சிறப்பான நிா்வாகத்துக்கு அடிப்படை. உங்களுடைய பணி நிதி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகபட்சமாக்குவதோடு மட்டுமல்லாமல், கொள்கை மாற்றங்களின் தாக்கத்தைப் பகுப்பாய்வு செய்வது, பல்வேறு நிா்வாக அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சீா்திருத்தங்களை முன்மொழிவது ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com