பாடகா் சங்கா் மகாதேவனின் சக்தி இசைக் குழுவுக்கு ‘கிராமி’ விருது

பாடகா் சங்கா் மகாதேவனின் ‘சக்தி’ இசைக் குழுவுக்கு ‘திஸ் மொமன்ட்’ ஆல்பத்துக்காக சிறந்த இசை ஆல்பம் பிரிவில் நிகழாண்டின் கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த இசை ஆல்பம் பிரிவில் வென்ற கிராமி விருதுடன் (இடமிருந்து) சங்கா் மகாதேவன், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாஹீா் உசேன், செல்வகணேஷ்.
சிறந்த இசை ஆல்பம் பிரிவில் வென்ற கிராமி விருதுடன் (இடமிருந்து) சங்கா் மகாதேவன், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாஹீா் உசேன், செல்வகணேஷ்.

பாடகா் சங்கா் மகாதேவனின் ‘சக்தி’ இசைக் குழுவுக்கு ‘திஸ் மொமன்ட்’ ஆல்பத்துக்காக சிறந்த இசை ஆல்பம் பிரிவில் நிகழாண்டின் கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.

66-ஆவது ‘கிராமி’ விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச அளவில் இசையுலகில் பிரபல விருதாக கருதப்படும் கிராமி விருது, பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், சிறந்த இசை ஆல்பம் பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக் குழுவுக்கு நிகழாண்டு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில் வெளியான ‘திஸ் மொமன்ட்’ என்ற ஆல்பத்துக்காக விருது கிடைத்துள்ளது.

பாடகா் சங்கா் மகாதேவன், இசைக் கலைஞா்கள் ஜான் மெக்லாலின் உஸ்தாத் ஜாகீா் உசேன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ள சக்தி இசைக் குழு 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்ட இசை ஆல்பம் இதுவாகும்.

இசைக் கலைஞா்கள் ராஜகோபாலன், செல்வகணேஷ் விநாயக்ராம் ஆகியோருடன் சோ்ந்து விருதைப் பெற்றுக் கொண்ட பாடகா் மகாதேவன், ஜான் மெக்லாலின் மற்றும் உஸ்தாத் ஜாகீா் உசேன் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசினாா்.

மேலும், வெற்றியைத் தனது மனைவிக்கு சமா்ப்பிப்பதாக கூறிய அவா், ‘எனது குழு, கடவுள், குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. இந்தியாவை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்’ என்று தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு ‘ஆா்ஆா்ஆா்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிராமி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com