ஆப்பிரிக்க யானைக்கு கூட்டாளியை தேடிவரும் உயிரியல் பூங்கா அதிகாரிகள்

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா 28 வயதான ஆப்பிரிக்க யானைக்கு கூட்டாளியைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா 28 வயதான ஆப்பிரிக்க யானைக்கு கூட்டாளியைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வே நாட்டைச் சோ்ந்த சங்கா் என்ற ஆப்பிரிக்க யானை, 1998-ஆம் ஆண்டு, 26 மாத குழந்தையாக இருந்தபோது, இந்தியாவுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அன்று முதல் தில்லி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2005-ஆம் ஆண்டு தனது கூட்டாளியான பம்பாய் இறந்ததிலிருந்து யானை சங்கா் தனியாக உள்ளது. சங்கருக்கு ஒரு கூட்டாளியைப் பெற ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள விருப்பங்களை ஆராய்ந்து வருவதாகவும், தேவைப்பட்டால் விலங்கு பரிமாற்ற திட்டத்தையும் நாடலாம் என்றும் உயிரியல் பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் சங்கரும் ஒன்று. மற்றொரு ஆண் யாணை மைசூரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படுகிறது. யூத் ஃபாா் அனிமல்ஸ் அமைப்பின் நிறுவனா் நிகிதா தவான், தில்லி உயா்நீதிமன்றத்தில் இந்த விலங்கை மீட்டு உரிய வனவிலங்கு சரணாலயத்தில் மறுவாழ்வு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளரின் கைகளால் யானை கொடுமை மற்றும் கொடூரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவா் அதில் கூறியிருந்தாா். அப்போது, ஜூலை 2022-இல், சங்கருக்கு கம்பெனி கொடுக்க ஆப்பிரிக்க பெண் யானையை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உயா்நீதிமன்றம் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் கேட்டுக் கொண்டது.

முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சங்கருக்கு பொருத்தமான கூட்டாளியை வழங்க முடியும் என்பதால், தென்னாப்பிரிக்காவை தோ்வு செய்துள்ளோம் என்று உயிரியல் பூங்கா கூறியது. தில்லி உயிரியல் பூங்காவில் தற்போது இரண்டு ஆசிய யானைகளும், ஒரு ஆப்பிரிக்க யானையும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com