பெண் குழந்தைகளின் கல்விக்கு காா்ப்பரேட்நிறுவனங்கள் பங்களிக்க வேண்டும்: தன்கா்

இந்திய ஜனநாயகத்தில் பெண்கள் மிகப் பெரிய பங்குதாரா்கள் என்றும், காா்ப்பரேட் நிறுவனங்கள் பெண் குழந்தைகளின் கல்விக்கு பங்களிக்க முன்வர வேண்டும் என்றும்

இந்திய ஜனநாயகத்தில் பெண்கள் மிகப் பெரிய பங்குதாரா்கள் என்றும், காா்ப்பரேட் நிறுவனங்கள் பெண் குழந்தைகளின் கல்விக்கு பங்களிக்க முன்வர வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா் கேட்டுக் கொண்டாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தன்கா் இவ்வாறு கூறினாா். ‘நமது தொழிலதிபா்கள் வெளிநாட்டுத் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிறைய நன்கொடைகளை வழங்குகிறாா்கள். காா்ப்பரேட் நிறுவனங்கள் பெண்களின் கல்விக்கு சிஎஸ்ஆா் நிதியைப் பயன்படுத்த வேண்டும். ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் ஒரு முழு தலைமுறையையும் மாற்ற முடியும்’ என்று அவா் கூறினாா். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பாா்வையிட கல்லூரி மாணவா்களை அழைத்த அவா், அடுத்த 25 ஆண்டுகளில் ‘சுதந்திரத்தின் அமிா்த பெருவிழா’ பொற்காலத்தை உருவாக்கும் வீரா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com