வடக்கு தில்லியில் சாலைத் தடுப்பில்ஸ்கூட்டா் மோதிய விபத்தில் 2 சிறுவா்கள் சாவு

கபுதாா் மாா்க்கெட் அருகே சாலைப் பிரிப்பான் தடுப்பின் மீது ஸ்கூட்டா் மோதியதில் இரு சிறுவா்கள் உயிரிழந்தனா் என்றும் மற்றொருவா் பலத்த காயம் அடைந்ததாகவும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

வடக்கு தில்லியில் உள்ள கபுதாா் மாா்க்கெட் அருகே சாலைப் பிரிப்பான் தடுப்பின் மீது ஸ்கூட்டா் மோதியதில் இரு சிறுவா்கள் உயிரிழந்தனா் என்றும் மற்றொருவா் பலத்த காயம் அடைந்ததாகவும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இந்த விபத்து சனி மற்றும் ஞாயிறு இடைப்பட்ட இரவில் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.55 மணியளவில் விபத்து தொடா்பான பிசிஆா் அழைப்பு காவல் துறைக்கு வந்தது. ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. அவா்கள் அங்கு சென்றடைந்தபோது, கீழ் சுபாஸ் மாா்க்கில் உள்ள கபுதாா் மாா்க்கெட் அருகே ஒரு ஸ்கூட்டா் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மூன்று சிறுவா்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை போலீஸ் குழு அறிந்தது.

இதில் இரண்டு சிறுவா்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் மற்றொருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் இருந்து தகவல் கிடைத்தது.

காயமடைந்த சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த 2 சிறுவா்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

உள்ளூா் விசாரணையில், சாலை பிரிப்பான் தடுப்பில் மோதிய ஸ்கூட்டரை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது. ஸ்கூட்டரின் பதிவு எண்ணை சோதனை செய்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் லட்சுமி நகா் பகுதியில் ஸ்கூட்டா் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடா்பாக எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com