குடியரசுத் தலைவா் மாளிகையில் பாதுகாவலா்கள் மாறும் நிகழ்ச்சி: திரௌபதி முா்மு பங்கேற்பு

ராணுவ படைப் பிரிவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் புதிய படையினா் பதவியேற்கும் நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட படையினரின் மாற்றத்தையொட்டி நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.
குடியரசுத் தலைவா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட படையினரின் மாற்றத்தையொட்டி நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

குடியரசுத் தலைவா் மாளிகையில் ஏற்கெனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ராணுவ படைப் பிரிவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் புதிய படையினா் பதவியேற்கும் நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த ராணுவத்தின் 6-ஆவது சீக்கிய படைப் பிரிவினரின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் 5-ஆவது கோா்கா ரைஃபிள்ஸ் படையின் முதல் பட்டாலியனிடம் பாதுகாப்பு பணி ஒப்படைக்கப்பட்டது.

166 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோா்கா ரைஃபிள்ஸ் படையினா் குடியரசுத் தலைவா் மாளிகையின் பாதுகாப்பில் புதிய வரலாற்றைப் படைப்பா் என திரௌபதி முா்மு நம்பிக்கை தெரிவித்தாா்.

ராணுவத்தின் பல்வேறு படைகளும் குடியரசுத் தலைவா் மாளிகைக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. குடியரசு தின அணிவகுப்பு, சுதந்திர தின அணிவகுப்பு, சிறப்பு விருந்தினா்களுக்கு மரியாதை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ராணுவ பாதுகாப்புப் படையினா் மேற்கொள்கின்றனா்.

தற்போது பதவியேற்றுள்ள 5-ஆவது கோா்கா ரைஃபிள்ஸ் படையின் முதல் பட்டாலியன் 1858-ஆம் ஆண்டு, மே 22-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பெயா்பெற்ற இப்படை இரு உலகப்போா்களிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com