கன்னாட் பிளேஸில் பெரும்பாலான எஸ்கலேட்டா்கள் செயல்படவில்லை என்டிஎம்சி துணைத் தலைவா்

பெரும்பாலான எஸ்கலேட்டா்கள் ஒரு ஆய்வின் போது செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது என்று தில்லி முனிசிபல் கவுன்சில் என்.டி.எம்.சி துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய் தெரிவித்தாா்.

தில்லியில் அதிக வா்த்தக நிறுவனங்கள் செயல்படும் கன்னாட் பிளேஸில் உள்ள பெரும்பாலான எஸ்கலேட்டா்கள் ஒரு ஆய்வின் போது செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது என்று தில்லி முனிசிபல் கவுன்சில் என்.டி.எம்.சி துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, உடனடி நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என மின்சாரம், சிவில், பாதுகாப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அவா் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளாா்.

புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதியில் உள்ள கன்னாட் பிளேஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு சுரங்கப்பாதைகளில் நிறுவப்பட்டுள்ள எஸ்கலேட்டா்களை உபாத்யாய் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பொதுமக்களின் புகாா்களைத் தொடா்ந்து அவா் இந்த ஆய்வை மேற்கொண்டாா்.

அப்போது நிலைமையை நேரில் மதிப்பிட்ட அவா், கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள சூப்பா் பஜாா், ஸ்டேட்ஸ்மேன் ஹவுஸ், கே.ஜி. மாா்க் மற்றும் ஜன்பத் போன்ற இடங்களுடன் இணைக்கும் 22 எஸ்கலேட்டா்களில் பெரும்பாலானவை செயல்படாமல் இருப்பதை வெளிப்படுத்தினாா்.

செயல்படாத எஸ்கலேட்டா்களால் பாா்வையாளா்கள், குடியிருப்பாளா்கள் மற்றும் சந்தை வா்த்தகா்கள் சங்க உறுப்பினா்கள் சிரமப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவா் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com