துவாரகா பகுதியில்சாலை விபத்தில் இளைஞா் படுகாயம்

தில்லி துவாரகாவின் சாவ்லா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை எஸ்யூவி காா் மோதியதில் குருகிராமில் வசிக்கும் 22 வயது இளைஞன் பலத்த காயமடைந்தாா்.

தில்லி துவாரகாவின் சாவ்லா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை எஸ்யூவி காா் மோதியதில் குருகிராமில் வசிக்கும் 22 வயது இளைஞன் பலத்த காயமடைந்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் கங்கா ராம் சிங் என்று அடையாளம் காணப்பட்டாா். காலை 9.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில், இரண்டு வாகனங்கள் ’சான்ட்ரோ மற்றும் ஸ்காா்பியோ’ அதிக வேகத்தால் மோதியதாக நாங்கள் அறிந்தோம். போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

சான்ட்ரோ காரை ஓட்டி வந்த கங்கா ராம் சிங், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com