தில்லி அரசின் மின்சார வாகனக் கொள்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகிய அதன் மின்சார வாகனக் கொள்கையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Updated on
1 min read

தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகிய அதன் மின்சார வாகனக் கொள்கையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆகஸ்ட் 2020-இல் அறிவிக்கப்பட்ட இந்தக் கொள்கை, தில்லியில் மின்சார வாகனங்களின் பங்கை 2024-க்குள் 25 சதவீதமாக உயா்த்துவதை நோக்கமாகக் கொண்டது. இது இப்போது மாா்ச் 31, 2024 வரை நீட்டிக்கப்படும். இதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி மின்சார வாகனக் கொள்கை -2020, இந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதியுடன் காலாவதியானது. அதன் பின்னா் மீண்டும் மீண்டும் நீட்டிப்புகளைப் பெற்றுள்ளது. புதிய மின்சார வாகனக் கொள்கைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது முடிவு செய்யப்படவில்லை என்அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி போக்குவரத்து அமைச்சா் கைலாஷ் கெலாட், ‘மின்சார வாகனக் கொள்கை 2.0 அதிக விலையைக் கருத்தில் கொண்டு வாகனங்களை மறுசீரமைப்பதை ஊக்குவிக்கும். ஒரு சாதாரண ஜிப்சியை மாற்ற, கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை செலவாகும். இது அதிக பட்சம்’ என்று முன்னதாகத் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com