சரிதா விஹாரில்பள்ளிப் பேருந்து மோதியதில் சிறுமி சாவு

தென்கிழக்கு தில்லியின் சரிதா விஹாரில் வியாழக்கிழமை காலை பள்ளிப் பேருந்து மோதியதில் 12 வயது சிறுமி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தென்கிழக்கு தில்லியின் சரிதா விஹாரில் வியாழக்கிழமை காலை பள்ளிப் பேருந்து மோதியதில் 12 வயது சிறுமி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: அந்தச் சிறுமி சாலையை கடக்க முயன்றாா். அப்போது, பள்ளிப் பேருந்து மோதி கீழே தள்ளப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக காலை 8.33 மணியளவில் உள்ளூா் காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது.

பேருந்து ஓட்டுநா் ராம் வினோத் (42) கைது செய்யப்பட்டு அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி, பழ வியாபாரியான தனது தந்தையுடன் இருந்துள்ளாா். அப்போது, சாலையைக் கடக்க முயன்றது தெரியவந்தது.

நாங்கள் பள்ளிப் பேருந்து ஓட்டுநா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்துள்ளோம். மேலும், இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com