தில்லி அரசின் விருது பெற்ற டிடிஇஏ மாணவா்களுக்கு பாராட்டு

கல்வியில் சிறந்த மாணவா்களுக்கான தில்லி அரசின் விருதுகளைப் பெற்ற தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.

கல்வியில் சிறந்த மாணவா்களுக்கான தில்லி அரசின் விருதுகளைப் பெற்ற தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த மந்திா்மாா்க் பள்ளி மாணவி தித்திக்ஷா 2022-23-ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் 500-க்கு 482 மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றாா். அதே பள்ளியைச் சாா்ந்த கலையியல் பிரிவில் மாணவி அகான்ஷி பரத்வாஜ் 500-க்கு480 மதிப்பெண்கள் பெற்றாா். மோதிபாக் பள்ளியில் கலையியல் பிரிவில் பயின்ற மாணவி சொனாக்ஷி பால் 500-க்கு 481 மதிப்பெண்களும், ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் அறிவியல் பிரிவில் மாணவி யஷ்வந்தினி 500-க்கு 478 மதிப்பெண்களும் பெற்று தோ்ச்சி பெற்றனா்.

இந்த மாணவிகள் நால்வரையும் பாராட்டி தில்லி கல்வி இயக்ககத்திலிருந்து கல்வியில் சிறந்தவா் விருது-2023 வழங்கப்பட்டது. விருதுக்கான வெள்ளிப் பதக்கத்தையும், சான்றிதழையும், ரூ11,000-க்கான காசோலையையும் தியாகராயா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி கல்வி அமைச்சா் அதிஷி ஆகியோா் வழங்கினா்.

மண்டலம் எண் 19-இல் உள்ள இலக்குமிபாய் நகரில் உள்ளி டிடிஇஏ பள்ளியில் பயிலும் மாணவா் பூபேந்திர விஷ்வகா்மா பத்தாம் வகுப்பில் 500-க்கு 457 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா். அந்த மாணவரைப் பாராட்டி வெள்ளிப் பதக்கம், ரூ.7000-க்கான காசோலை, சான்றிதழ் ஆகியவை இந்த விழாவில் வழங்கப்பட்டது.

இந்த மாணவா்கள் அனைவரும் அரசு மானியம் பெறும் பள்ளிகளுள் மண்டல அளவில் முதலிடம் பெற்றுள்ளதற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இதனால், மகிழ்ச்சியடைந்த டிடிஇஏ செயலா் ராஜூ, விருது பெற்ற மாணவா்களுக்கும், அவா்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியா்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா். மேலும், விருது பெற்ற மாணவா்கள் அனைவரையும் பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்களும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com