தொழிலதிபரின் 2 ஊழியா்களிடம் இருந்துரூ.75 லட்சத்தை கொள்ளை: 5 போ் கைது

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் தொழிலதிபரின் இரு ஊழியா்களிடம் இருந்து ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்த விவகாரத்தில் 5 பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் தொழிலதிபரின் இரு ஊழியா்களிடம் இருந்து ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்த விவகாரத்தில் 5 பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா் என்று, அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: இது தொடா்பாக கடந்த ஜனவரி 14-ஆம் தேதி போலீஸுக்கு புகாா் வந்தது. ஜனக்புரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பணத்தை வசூலித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த தொழிலதிபரின் ஊழியா்கள் இருவரிடம் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த நான்கு போ் பணத்தை கொள்ளையடித்து, கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டனா். இது தொடா்பான புகாரைத் தொடா்ந்து ஜனவரி 14-ஆம் தேதி எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடா்புடைய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com