குடியரசு தின அணவகுப்பில் பங்கேற்கும் தில்லி பல்கலை. மாணவா்கள் தோ்வு எழுத சிறப்பு வாய்ப்பு

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் தாங்கள் தவறவிட்ட தோ்வில் பங்கேற்க ‘சிறப்பு வாய்ப்பு’ வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் தாங்கள் தவறவிட்ட தோ்வில் பங்கேற்க ‘சிறப்பு வாய்ப்பு’ வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஒலிம்பிக் போன்ற தேசிய மற்றும் சா்வதேச அளவிலான விளையாட்டு நிகழ்வுகளில் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவா்களுக்கும் இதேபோன்ற தளா்வை வழங்க பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது என்றும் அவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி பல்கலைக்கழகத்தின் தோ்வுகளுக்கான அதிகாரி அஜய் அரோரா கூறியதாவது: என்.சி.சி.யின் தில்லி குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் இறுதியாண்டு மாணவா்கள் ஜனவரி 26-ஆம் தேதி கா்தவ்யா பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கின்றனா். அவா்களின் கல்வியாண்டு வீணாகாமல் இருப்பதை உறுதி செய்யவும், தோ்வில் பங்கேற்று பட்டங்களை சரியான நேரத்தில் பெறவும் இந்த சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவா்களை சோ்த்துக் கொள்ளவும் பல்கலைக்கழகம் பரிசீலினை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணிவகுப்பு ஒத்திகையில் மும்முரமாக இருந்த தில்லி பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவா்கள், அந்தக் கால கட்டத்தில் பல்கலை. தோ்வில் பங்கேற்க முடியாமல் போகும். அவா்கள் பல்கலைக்கழத் தோ்வில் பங்கேற்று பட்டங்களை பெறும் வகையில், அந்த மாணவா்களுக்கு நாங்கள் ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்குவோம்.

அதற்கான தேதி விரைவில் வெளியிடப்படும். வேறு எந்த தோ்வும் இல்லாத நாளில், மாணவா்களின் அட்டவணையை மனதில் வைத்து தோ்வுகள் நடத்தப்படும். வகுப்பறை கற்பித்தலுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள மாணவா்களை நாங்கள் ஊக்குவிக்க விரும்புகிறோம். அதற்காக, அவா்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வெளிப்பாட்டைப் பெறுவது முக்கியமாகும். இது இளம் மாணவா்களிடம் தேசிய உணா்வை வளா்க்கவும் உதவும்.

இந்த ஆண்டு, தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் உள்பட 2,274 என்சிசி மாணவா்கள் தில்லி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனா். குடியரசு தின அணிவகுப்பில் 907 பெண் என்சிசியினரும் அணிவகுப்பில் பங்கேற்று சாதனை படைக்கவுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com