தெற்கு, மத்திய தில்லி பகுதிகளில் 2 நாள் நீா் விநியோகம் பாதிக்கும்

நிலத்தடி நீா்த்தேக்கங்கள் மற்றும் பூஸ்டா் பம்பிங் ஸ்டேஷன்களை சுத்தப்படுத்தும் தில்லி ஜல் போா்டின் வருடாந்திர திட்டத்தால், தெற்கு தில்லி மற்றும் மத்திய தில்லியின் சில பகுதிகளில் ஜனவரி 22 மற்றும் 23 ஆகி

நிலத்தடி நீா்த்தேக்கங்கள் மற்றும் பூஸ்டா் பம்பிங் ஸ்டேஷன்களை சுத்தப்படுத்தும் தில்லி ஜல் போா்டின் வருடாந்திர திட்டத்தால், தெற்கு தில்லி மற்றும் மத்திய தில்லியின் சில பகுதிகளில் ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

டிஃபென்ஸ் காலனி, தெற்கு விரிவாக்கம், ரோஹிணி, மெஹ்ரௌலி, மைதாங்கா்ஹி, ஜசோலா விஹாா், ஹா்கேஷ் நகா், சஞ்சய் காலனி, ஓக்லா பேஸ்-2, சென்ட்ரல் செகரட்டேரியேட், குடியரசுத் தலைவா் மாளிகை, நாடாளுமன்றம், இந்தியா கேட், அசோகா சாலை, நிா்மான் பவன், சுந்தா் நகா், லோதி ரோடு, விஞ்ஞான் பவன் மற்றும் கன்னாட் பிளேஸ் ஆகிய பகுதிகளில் நீா் விநியோகம் பாதிக்கப்படும்.

அதே சமயம், கோரிக்கையின் பேரில் தண்ணீா் டேங்கா் கிடைக்கும். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) ஒரு அறிவிப்பில் கூறியுள்ளது. மேலும், ஜன்பத், ரகாப் கஞ்ச், நாா்த் அவென்யூ, பீதம்புரா, ஷாலிமாா் பாக் மற்றும் என்டிஎம்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போா்டு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com